2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

பனைசார் உற்பத்தி;மக்களின் வாழ்க்கை உயர்வடையும்-வீரக்குமார திஸாநாயக்க

Super User   / 2010 ஜூன் 24 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பனைசார் உற்பத்திகளை பெருக்கும்போது அது சார்ந்து வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மென்மேலும் மேம்படுத்த முடியுமென்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் வீரக்குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

தமது அமைச்சின் கீழ் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு சேவை செய்வதே தமது நோக்கமெனவும் அவர் கூறினார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--