2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று

Editorial   / 2019 நவம்பர் 20 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்திலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் கடந்தாண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடை​பெற்ற இலங்கையின் 70ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

குறித்த உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று (19) லண்டன்- வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பிரிகேடியரை கைதுசெய்வதற்கான பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு, நீதவான் நீதிமன்ற அலுவலக சபைக்கு இடையில் ஏற்பட்ட தாமதப் பிரச்சினை காரணமாக, பிடிவிறாந்து நீக்கிக்கொள்ளப்பட்டது.

பின்னர், குறித்த வழக்கை தனது பொறுப்பின் கீழ் எடுத்த நீதிவான் நீதிமன்றத்தின் பிரதான நீதவான் ஏமா அர்பத்நோட் குறித்த வழக்கை ஆரம்பத்திலிருந்து விசாரிக்க தீர்மானித்தார்.

பல சந்தர்ப்பங்களில் இந்த வழக்கின் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று (19) இறுதி சாட்சியை விசாரணை செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .