2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பொருட்களின் விலை அதிகரிப்பு;ஐ.தே.க ஏனைய கட்சிகளுடன் பேச்சு

Super User   / 2010 ஜூன் 27 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியவசிய பொருட்களின் விலை மற்றும் வரி அதிகரிப்பை கண்டித்து ஒற்றுமையாக எதிர்ப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஏனைய எதிர் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக அக்கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜெயசூரிய டெய்லிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இது சம்பந்தமாக ஏனைய கட்சிகளுடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக வறிய மக்கள் கஷ்டத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, வரி அதிகரிப்பு காரணமாக ஏழைகள் துன்பப்படுகின்றனர். அதேவேளை பணக்கார மக்கள் சந்தேசப்படுகின்றனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய குறிப்பிட்டார்.

மேலும், அரசியலமைப்பில் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை  மூன்று ஆண்டுகளாக அதிகரிப்பதற்கு அரசாங்கத்தில் உள்ள இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--