2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் 2013ஆம் ஆண்டு இலங்கை வருவார்?

Super User   / 2010 ஜூன் 01 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் இலங்கைக்கான விஜயம் மேற்கொள்வார் என்று  எதிர்பார்க்கப்படுவதாக பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் டொமினிக் வில்லியம்ஸ் தெரிவித்தார்.

இலங்கையில் 2013ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின்  தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாகவே இவர் இலங்கைக்கு வரவிருப்பதாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர் கூறினார்.

மேற்படி  மாநாடு 2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு அடுத்தாக இலங்கையில் நடைபெறவிருப்பதாகவும் டொமினிக் வில்லியம்ஸ் குறிப்பிட்டார்.

இரண்டு வருடத்திற்கு ஒரு தடவை நடைபெற்று வருகின்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில், உலகமயமாக்கல்,  பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவது வழமையாகும்.

சர்வதேச சமூகத்திற்கான சமாதானம், பாதுகாப்பு, ஜனநாயகம், நல்லாட்சி, அபிவிருத்தித் திட்டங்கள், முகாமைத்துவம், கல்வி, சுற்றாடல், பால் சமத்துவம், சுகாதாரம், மனித உரிமைகள், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், சட்டம்,  பல்வகை வர்த்தகம், இளைஞர் பாதுகாப்பு ஆகியன தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டிஷ், ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, கனடா ஆகிய நாடுகள் உட்பட இதில் 54 நாடுகள் தற்போது அங்கம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--