2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

பிரதமரின் நிகழ்வை புறக்கணித்த ஐ.தே.க எம்.பி

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், நேற்று மாத்தளை எட்வர்ட் மைதானத்தில், இடம்பெற்ற நிகழ்வொன்றை மாத்தளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன புறக்கணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரண கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக, தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் தகுதியானவர்கள் அல்லவென்றும், இதில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாலேயே, பிரதமரின் நேற்றைய நிகழ்வைப் புறக்கணித்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சமுர்த்தி கொடுப்பனவு தெரிவினை கடந்த கால ஆட்சியில் நியமிக்கப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகளே மேற்கொண்டதாகவும்,  இவர்கள் சரியானவர்களை சமுர்த்தி கொடுப்பனவைப் பெறுவதற்காக தெரிவு செய்யப்படவில்லை என்பதை தான் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போதும் சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .