2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

பிரதி ஊடக அமைச்சர் பதவியிலிருந்து மர்வின் சில்வா ராஜினாமா

Super User   / 2010 மே 07 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதி ஊடகத்துறை அமைச்சர் பதவியினை தான் ராஜினாமா செய்யவுள்ளதாக மர்வின் சில்வா தெரிவித்தார்.

இருப்பினும் ஊடகவியலாளர்கள் எந்நேரமும் தனது வீட்டுக்கு வரவேற்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

சற்று நேரத்துக்கு முன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்த அவர், தனது இந்த தீர்மானத்துக்கு எந்தவொரு அமைச்சரும் காரணமில்லை என்றும் உட்டிக்காட்டினார்.

இதேவேளை, பிரதி ஊடகத்துறை அமைச்சர் மர்வின் சில்வா தனது பதவியை இன்று மாலை ராஜினாமா செய்யவுள்ளார் என்று தமிழ்மிரர் இணையத்தளம் இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--