2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பிரபாகரன் 2009 மே 19இல் கொல்லப்பட்டார்- ஜெனரல் சரத் பொன்சேகா உறுதி

Super User   / 2010 மே 20 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த வருடம் மே மாதம் 19ஆம் திகதியே கொல்லப்பட்டார் என்று ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த வருடம் மே மாதம் 18ஆம் திகதியே பிரபாகரன் கொல்லப்பட்டார் எனும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

போர் வெற்றி குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மே மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்ததை அடுத்தே வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் தான் நடத்தப்படும் விதம் குறித்தும் ஜெனரல் சரத் பொன்சேகா தனது ஏமாற்றத்தை இதன்போது வெளியிட்டார்.

 

  Comments - 0

  • sheen Thursday, 20 May 2010 09:52 PM

    பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் சரி.திகதி எதுவாக இருந்தாலும் இன்னும் பிரபாகரன் உயிருடன்இருப்பதாக தமிழ்நாட்டில் அநேகர் நம்புகின்றனராம் எரிட்ரியா என்னும் ஆப்ரிக்க நாட்டில் முகமாற்று சிகிச்சை செய்துகொண்டு வாழ்வதாக! இதெல்லாம் மக்களுக்கு முக்கியம் இல்லை. இராணுவமயமாக்கல் நிறுத்தப்பட்டு சிவில் நிர்வாகம் மக்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும். இதில் அரசும் அதன் ஆதரவாளர்களும் இதயசுத்தியுடன் நடந்துகொள்ள வேண்டும். திருந்தியபுலி திருந்தாதபுலி திருத்தமுடிந்த புலி ஒருபோதும் திருத்தப்படமுடியாதபுலி என்று இனம் பிரிக்காமல்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--