2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

பெரியகடை ஜூம்ஆ பள்ளி வாயலுக்கு பெற்றோல் குண்டு வீச்சு

Editorial   / 2017 ஜூன் 03 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக் 

திருகோணமலை பெரியகடை ஜூம்ஆ பள்ளி வாயல் மீது, இன்று (03)  அதிகாலை இனந்தெரியாத நபர்களினால், பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

நோன்பு தொழுக்கைக்காக பள்ளி வாயலுக்குச் சென்று, மக்கள் திரும்பியதையடுத்து, குறித்த பள்ளிவாயவலுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக, 119 அவசர தொ​லைபேசி இலக்கத்துக்கு வந்த அழைப்பையடுத்தே, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

பள்ளி வாயலுக்குள், பெற்றோல் நிரப்பப்பட்ட நான்கு போத்தல்கள் காணப்பட்டதாகவும் நிலங்களில் போடப்பட்டிருந்த காபட் மற்றும் பாய்கள் எரிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X