2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

போரில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு;அமெ.ரூ.1,040கோடி நிதியுதவி

Super User   / 2010 ஜூன் 21 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வளிப்பதற்காக அமெரிக்கா, 1,040கோடி ரூபாவினை நிதியுதவியளிக்கவுள்ளது என்று இலங்கையிலுள்ள அகதிகளுக்கான ஐ.நா.பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வளிக்கும் ஐ.நா.வின் திட்டத்தின் பிரகாரம், இதுவரையில் 50ஆயிரத்து 400குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்கப்பட்டுள்ளது.

வீடுகளை இழந்தோருக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதுடன், அம்மக்களுக்குத் தேவையான பொருட்களையும் வழங்கும் விதத்தில் இந்தத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறித்த ஐ.நா.பிரிவு கூறியுள்ளது.

இந்நிலையில், ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறை காரணமாக பிற்போடப்பட்டிருந்த இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் நிதியுதவி காரணமாக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்  அகதிகளுக்கான ஐ.நா.பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--