2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

பார்வதி அம்மாளுக்கு அனுமதி; இந்திய கடிதம் வந்ததும் முடிவு-சிவாஜிலிங்கம்

Super User   / 2010 ஜூன் 13 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பார்வதி அம்மாள் தமிழகத்தில் உள்ள தனது மகளின் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற முடியும் என்ற இந்திய அரசின் உத்தரவுக் கடிதம் கிடைத்தவுடன், அது பற்றி முடிவு செய்யப்படும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை தமிழக அரசின் ஒப்புதலுடன், மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை தளர்த்தியது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து கூறிய, பார்வதி அம்மாளின் உறவினரும், முன்னாள் எம்.பி.யுமான சிவாஜிலிங்கம், கடந்த மே மாதம் 10ஆம் திகதி நாடு திரும்பிய பார்வதி அம்மாள், தமிழகத்தில் சிகிச்சை பெற விரும்பி யாருக்கும், எந்தக் கோரிக்கையையினையும் முன்வைக்கவில்லை என்று கூறினார். 

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அவரது மகள் வீட்டின் தங்கி பார்வதி அம்மாள் சிகிச்சை பெறலாம் என்று இந்திய அரசு நிபந்தனைகளை தளர்த்தி அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து, இதுவரை உத்தியோகபூர்வமாக எங்களுக்கு தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.  மலேசியா, இந்தியா, இலங்கை என அடுத்தடுத்து மேற்கொண்ட பயணத்தால் பார்வதி அம்மாளின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்து இப்போதுதான் தேறி வருகிறது. எனவே, அவர் உடனடியாக எங்கும் பயணம் மேற்கொள்ள வாய்ப்பில்லை என்றார்.

எனினும், இந்திய அரசின் அனுமதி குறித்த உத்தியோகபூர்வ தகவல் கிடைத்தபின், பார்வதி அம்மாளின் குடும்பத்தினர் அது குறித்து முடிவு செய்வார்கள் என்று சிவாஜிலிங்கம் மேலுன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--