Super User / 2010 ஜூலை 07 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்மிரர் இணையத்தளத்திற்குத் சற்றுமுன் தெரிவித்தார்.
பார்வதி அம்மாளின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"பார்வதி அம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகிறார். இன்று காலை நான் அவரை பார்வையிடச் சென்றேன். கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் கவலைக்கிடமான நிலை என்று கூறமுடியாது" என சிவாஜிலிங்கம் கூறினார்.
பார்வதி அம்மாள் தற்போது நீராகாரம் மாத்திரமே உட்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த பல வாரங்களாக அவர் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago