2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

Editorial   / 2020 மார்ச் 03 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேற்றுக்கமைய மாவட்ட பெறுபேறு மற்றும் நாடளாவிய ரீதியான அடைவு மட்டம் வெளியிடப்படமாட்டாது என ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் டிசெம்பர் 2ஆம் திகதி முதல் டிசெம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன.

நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெற்றிருந்தது. 

இந்தப் பரீட்சைகளில் 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .