Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2017 ஜூன் 09 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
விடுதலைப்புலிகள் அமைப்புடன் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தொடர்பு கொண்டிருந்ததாக, மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், மலேசியாவுக்குள் நுழைய தடை விதித்துள்ளனர்.
மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வைகோவின் கடவுசீட்டை பறிமுதல் செய்து, இன்றிரவு விமானத்தில் சென்னைக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் மகளின் திருமண வரவேற்பு நிகழச்சியில் கலந்துகொள்ள வைகோ, அங்கு சென்றுள்ளார்.
மலேசிய தூதரகம் கடந்த வாரமே வைகோவுக்கு விசா வழங்கி விட்ட நிலையில், நேற்று நள்ளிரவு 11.55 மணிக்கு வைகோ தனது செயலாளர் அருணகிரியுடன் மலேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இன்று காலை 6.30 மணிக்கு கோலாலாம்பூர் விமான நிலையத்தை சென்றடைந்த அவரிடம், மலேசிய குடிவரவு சோதனையில் “நீங்கள் மலேசிய நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளனர்.
அங்கிருந்த உயர் அதிகாரிகள், “நீங்கள் இலங்கையிலுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்” என்று சொல்லி விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாகப் பல கேள்விகளைக் கேட்டுள்ளனர். அத்துடன், இலங்கையில் உங்கள்மீது பல வழக்குகள் உள்ளதாக கூறியுள்ளனர்.
“இல்லை, நான் இந்தியக் குடிமகன்,” என்று வைகோ கூறி கடவுச் சீட்டைக் காட்டிய போதிலும் அதை அவர்கள் ஏற்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
“மலேசியா நாட்டுக்கு ஆபத்தானவர் என்ற பட்டியலில் உங்கள் பெயர் இருக்கின்றது. எனவே உங்களை மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது” என்று கூறி, வைகோவின் கடவுச் சீட்டை வாங்கி வைத்துக்கொண்டதாக, .து தொடர்பில் ம.தி.மு.க வெ ளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago