2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

பாலித கொஹன தலைமையில் பலஸ்தீன மக்களின் மனித உரிமை மீறல் விசாரணை

Super User   / 2010 ஜூன் 04 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலுள்ள பலஸ்தீன மக்களினதும், ஏனைய அரேபியர்களினதும் மனித உரிமைகளை பாதிக்கும் இஸ்ரேலிய நடைமுறை குறித்து விசாரிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபைத் தூதுக் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹன தலைமை தாங்கவுள்ளார்.

இந்த விசேட விசாரணை தூதுக் குழு ஜூன் மாதம் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை எகிப்துக்கும்,  11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை ஜோர்டானுக்கும், 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை சிரியாவுக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  Comments - 0

  • koneswaransaro Saturday, 05 June 2010 03:27 AM

    சபாஷ்! திருடனிடம் விதானை வேலை.

    Reply : 0       0

    koneswaransaro Sunday, 06 June 2010 04:44 AM

    மனித உரிமைகளை விசாரணை செய்வதற்கு சரியான தலைமை ஏற்பாடு பண்ணப் பட்டிருக்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .