2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பாலித ரங்கே பண்டார குணமடைந்து வருகிறார்

Super User   / 2010 ஏப்ரல் 11 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டத்தில்  ஐக்கிய  தேசியக் கட்சி சார்பாக நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட  பாலித ரங்கே பண்டார மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  தற்போது குணமடைந்து வருகிறார். 

சிலாபத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்தின்போது, பாலித ரங்கே பண்டார மீது  தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர்  கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பாலித ரங்கே பண்டார தற்போது குணமடைந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இந்தத் தாக்குதலில் காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகர்த்தர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சாந்த அபயரட்ன பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். இவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X