2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5 ஆயிரம் முறைப்பாடுகள்

Kamal   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மூன்று வருடங்களில் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ. எச். மனதுங்க  தெரிவித்துள்ளார்.

அதிகார துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  பொலிஸார் பக்கச்சார்பான முறையில் நடந்து கொண்டமை, இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பிலும் தமது ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவற்றில், 90 வீதமான முறைப்பாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில்,  ஏனைய முறையாடுகள் குறித்தும்  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--