2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

பாதுகாப்பிலிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; பொலிஸ் அதிகாரிகள் மூவர் இடைநிறுத்தம்

Super User   / 2010 மே 26 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரின் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி, ஒரு பொலிஸ் அதிகாரியும் இரு பொலிஸ் கான்ஸ்டாபிள்களும் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

மேற்படி நபர்  உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி நபர் கடந்த 24ஆம் திகதி திடீரென உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறித்த நபரின் உறவினர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

தனது பதிவை உறுதிப்படுத்தத் தவறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில்  கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக பொலிஸாரால் சந்தேகிக்கப்பட்டிருந்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--