2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பால் புரைக்கேறி சிசு உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2017 ஜூலை 25 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

செங்கலடிப் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஆண் சிசுவொன்று, இன்று அதிகாலை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது என, பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலையைச் சேர்ந்த கிருபாகரன் அஸ்வின் என்ற சிசுவே உயிரிழந்துள்ளது.
பிறந்து 6 மாதங்களேயான இரட்டையர்களின் ஒன்றான இச்சிசுவுக்கு ஏற்பட்ட  வயிற்றோட்டம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

இருப்பினும், இச்சிசு சுகவீனம் அடையாமையால் செங்கலடிப் பிரதேச வைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், இச்சிசுவுக்குப் புட்டிப்பால் பருகக் கொடுத்தபோதே, புரைக்கேறியுள்ளது.

இச்சிசுவைக் காப்பாற்றுவதற்கு முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .