2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

பிள்ளையான் நாளை இந்தியா செல்வாரா?

Super User   / 2010 ஜூன் 05 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலமையிலான குழு ஒன்று நாளை இந்தியா செல்லவுள்ளது. இக்குழுவில் கிழக்கு மாகண சபை உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். இதனை அறிந்த தமிழ்மிரர் இணையதளம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தது.

நேற்று காலை 8 மணியளவில் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் தமிழ்மிரர் இணையதளம் தொடர்பு கொண்டு இந்திய விஜயம் சம்பந்தமாக வினவியது. அதற்கு
ஐந்து நிமிடங்களின் பின் அழைப்பை மேற்கொள்வதாக கூறி அழைப்பை துண்டித்தார். எனினும், அதன் பின்னார் அவர் எம்மோடு தொடர்பு கொள்ளவில்லை. தமிழ்மிரர் இணையதளம் தற்போது செய்தி எழுதிக் கொண்டிருக்கும் வரை பலதடவை அவருடன் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அது பயனளிக்கவில்லை.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கிய தூதுக் குழு நாளை இந்தியா செல்வது நிச்சயம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தனர்.(R.A)

  Comments - 0

  • Haha Sunday, 06 June 2010 12:46 PM

    அவர் ரொம்ப busy போல. போன் call கூட answer பண்ண time இல்லாதவர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--