2025 ஜூலை 02, புதன்கிழமை

பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்

Administrator   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனின் பிரபல பாப் பாடகரான, ஜார்ஜியஸ் கிரியாசோசிஸ் பனயியோடோ என்றழைக்கப்படும் ஜார்ஜ் மைக்கேல் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 53 ஆகும். பாடகர் ஜார்ஜ் மைக்கேல் தமது இசைக் குழு மூலமாக உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார்.

ஜார்ஜ் மைக்கேலின் ஆல்பம்கள் கோடிக்கணக்கில் விற்பனை ஆகியுள்ளது. 'வேக் மி அப் பிஃபோர் யூ கோ-கோ அன்டுகேர்லெஸ் விஸ்பர்' போன்ற ஆல்பம் அவருக்கு உலகளாவிய அளவுக்கு ரசிகர் வட்டத்தை பெற்றுக் கொடுத்தது.
1987இல் முதல் முறையாக பாப் இசைக்குள் ஜார்ஜ் மைக்கேல் நுழைந்தார். அவரது முதல் ஆல்பம் 'ஃபெய்த்' 10 மில்லின் காப்பிகள் விற்பனையாகி சாதனை படைத்தது.

உலகம் முழுவதும் மக்கள் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடி கொண்டிருந்த நிலையில் ஜார்ஜ் மைக்கேல் உயிர் பிரிந்துள்ளது. உடல்நலக் குறைவுக் காரணமான நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .