Kogilavani / 2016 மே 23 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல, கொலன்னாவை பிரதேச மக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளையும் வழங்கினார்.
முதலில் வெல்லம்பிட்டி பிரதேசத்துக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு மக்கள் தங்கியுள்ள வெல்லம்பிட்டி வித்தியாவர்தன வித்தியாலத்துக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்தார்.
மக்கள் மத்தியில் சென்று தனிப்பட்ட ரீதியில் ஒவ்வாருவரிடமும் விவரங்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை பரீட்சித்துப் பார்த்ததுடன், அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் நிலவும் குறைபாடுகள் பற்றியும் விசாரித்தார்.
தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் பற்றி, மக்கள் இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார்கள். துரிதமாக இந்நிலைமைகள் பற்றிக் கண்டறியுமாறு உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கிய அவர், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிவாரணப் பணிகளை ஒழுங்காகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்புடைய பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மீதொட்டமுல்ல தர்மோதய விகாரையில் தங்கியுள்ள மக்களை சந்திப்பதற்காகச் சென்ற ஜனாதிபதி, அவர்களிடமும் நலன்விசாரித்ததுடன் அதன் பின்னர் கொலன்னாவ நாகவனாராம விகாரைக்குச் சென்று அங்கு தங்கியுள்ள மக்களைச் சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ள முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு, அரசாங்கம் பாடுபடுவதாக இம்மக்களைச் சந்தித்த ஜனாதிபதி குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago