Kogilavani / 2016 ஜூலை 12 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலத்மா ஜயவர்தன
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பில், பொதுமக்களின் அனுமதியைப் பெறுவதற்கான வாக்கெடுப்பொன்றை நடத்துமாறு, பிவிதுறு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, நேற்றுத் திங்கட்கிழமை (11) அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
இந்த வாக்கெடுப்பின் மூலம், மக்களது அனுமதியைப் பெறுவதற்கு அரசாங்கம் தவறும் பட்சத்தில், இந்தப் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு தாம் ஒத்துழைக்கப் போவதில்லை என்றும் இந்த ஒப்பந்தமானது, நாட்டின் சுதந்திரத்தை பாழ்ப்படுத்தும் ஒரு விடயமாகும் என்றும் அவர் கூறினார்.
'தூக்கி எறிந்து விடமுடியும் என்று எதையும் பிடிக்க வேண்டாம்... என்று கூறுவார்கள். அது தற்போது, இந்த அரசாங்கத்துக்கே பொருந்தும். இந்தியா போன்ற பெரிய நாடுகளுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுமாயின், எமது நாட்டுக்கு எந்தவொரு சூழ்நிலையிலும் அவற்றைச் சொந்தமாக பெற்றுக்கொள்ள முடியாது' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
5 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago