Niroshini / 2016 ஜூலை 11 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
“போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் அடுத்த ஆண்டில் புதிய வடிவில் நடைமுறைப்படுத்தப்படும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும், “போதைப்பொருள் அபாயத்திலிருந்து இளம் தலைமுறையை விடுவிப்பதற்கு எல்லோருடையதும் உடனடிக்கவனம் செலுத்தப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காக செய்யப்பட வேண்டிய எல்லா விடயங்களையும் அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்றும் எனவும் குறிப்பிட்டார்.
இன்று (11) முற்பகல் புத்தளம் ஆனந்த தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நடைபெற்ற போதைப்பொருளில் இருந்து விடுதலைபெற்ற நாடு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஏழாவது கட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதிஇ
“இன்று எமது நாட்டு மக்கள் மிக ஆபத்தான முறையில் போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டிருப்பதோடுஇ இலங்கையின் சனத்தொகையில் 45இ000 பேர் ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்.
சுமார் 2 இலட்சம் பேர் கஞ்சாவைப் பயன்படுத்துகின்றனர். இலங்கையில் சிகரெட் பயன்படுத்துபவர்களில் நூற்றுக்கு மூன்று சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. 2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்த நாட்டில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை நூற்றுக்கு 23.4 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளில் இருந்து விடுதலை பெற்ற நாடு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது கட்டம் இவ்வருட நிறைவில் 25 நிருவாக மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படும்” எனக் குறிப்பிட்டார்.
“சட்டவிரோதமான போதைப்பொருள்கள் தொடர்பில் தேடுதல்களை மேற்கொள்கின்ற அதிகாரிகளை கௌரவித்து, அவர்களுக்கு உயர்ந்த விருதுகளை வழங்கும் ஒரு நிகழ்ச்சித்திட்டமும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, போதைப்பொருளிலிருந்து விலகியிருத்தல் தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள் எதிர்காலத்தில் மேலும் பலப்படுத்தப்படும். இந்த எல்லா நடவடிக்கைகள் தொடர்பிலும் முதலாவது முன்மாதிரி, அரசியல்வாதிகளிடமிருந்து கிடைக்கப்பெறவேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.
3 hours ago
8 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
24 Oct 2025