2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

போதைப்பொருளை நுகரும் சாரதிகள் விரைவில் சிக்குவர்

Princiya Dixci   / 2016 மார்ச் 17 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து விதிகளை அலட்சியம் செய்யும் நீண்ட தூர பஸ் சாரதிகள், போதைப்பொருட்களை நுகர்ந்துள்ளனரா எனக் கண்டுபிடிப்பதற்காக உடனடி போதைப்பொருள் சோதனைக் கருவிகளை பொலிஸ் வாங்கவுள்ளதாக வாகனப் போக்குவரத்துப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிரி சேனரத்ன கூறினார். 

'நீண்ட தூரத்துக்குப் பயணிக்கும் பஸ் சாரதிகள், கஞ்சா மற்றும் வேறு போதைப்பொருளை நுகர்ந்துள்ள நிலையில் வாகனம் செலுத்துவது தற்போது அதிகரித்து வருகின்றது.

'தற்போது ஒரு சாரதி, போதைப்பொருளை எடுத்துள்ளாரா? என்பதை அறிய இரத்த சோதனை மேற்கொள்ளவேண்டியுள்ளது. இரத்தத்தைப் பெற்று, பகுப்பாய்வுக்கு அனுப்பி, பல காலத்தின் பின்னரே எமக்கு முடிவு கிடைக்கும்.

'மதுபானம் அருந்தும் சாரதிகளை மட்டுமே உடனடியாக அறியக் கூடிய கருவிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. 

'எனவே, கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை நுகரும் சாரதிகளை உடனடியாகக் கண்டுபிடிக்கும் கருவிகளை பொலிஸ் திணைக்களம், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X