2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

பாம்பு தீண்டி சிறுவன் உயிரிழப்பு

Gavitha   / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பாம்புக்கடிக்கு இலக்கான ஆறு வயது சிறுவன் ஒருவன், புதன்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மயிலியதனை தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் நளநிதி என்ற சிறுவனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புதன்கிழமை (14) காலை 8 மணியளவில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், திடீரென்று  மூச்சுவிடுவதற்கு அவதிப்பட்டுள்ளான். இதனையடுத்து உடனடியாக உறவினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று போதும், சிறுவன் இடை வழியில் உயிரிழந்துள்ளான்.

எனினும், சிறுவன் பாம்பு தீண்டியதாலேயே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--