2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

போம்பாவ பிரதேசத்தில் குடும்பஸ்தர் கொலை

Sudharshini   / 2016 மார்ச் 05 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலேவெல,போம்பாவ பிரதேசத்தில், கே.ஜி.நிசாந்த (வயது 32) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை, கூரிய ஆயுதம் மற்றும் கல்லால் தாக்கி  கொலை செய்யப்பட்டுள்ளார் என கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (04) இரவு இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கே.ஜி.நிசாந்த என்பவருக்கும் கைதான சந்தேக நபரின் மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறி, மேற்படி நபர், கே.ஜி.நிசாந்தவை கூரிய ஆயுதம் மற்றும் கல்லால் தாக்கியதுடன் விஷத்தையும் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

ஆபத்தான நிலையில் இருந்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும்  சிகிச்சை பலனின்றி அந்நபர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .