Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 டிசெம்பர் 20 , பி.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரான் பிரியங்கர
கற்பிட்டி பிரதேசச் செயலாளரைத் தாக்கி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று கூறப்படும் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரை, பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று, திங்கட்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.
கற்பிட்டி நகருக்கு அருகாமையில், ஆயுர்வேத மருத்துவ நிலையமொன்றை நடத்திவந்த அப்துல் சம்திக் சேகு அப்துல் (வயது 53) என்ற, வைத்தியரே, இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். அலுவலகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது, காணி தொடர்பான பிரச்சினையொன்றுக்கு தீர்வுகாண வந்திருந்த மேற்படி வைத்தியர், தன்னுடைய கடமைக்கு இடையூறு விளைவித்தது மாத்திரமன்றி, தன்னை செருப்பால் தாக்கியதாக, பதில் பிரதேச செயலாளர்
எச்.எம்.எஸ்.பி.ஹேரத், கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது விடயமாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையதான வைத்தியரைக் கைது செய்துள்ளனர். உரிய விசாரணைகளின் பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago