Kanagaraj / 2016 ஜூலை 09 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையிலேயே அவருக்கு நான்கு மணிநேரம் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்துகம, மீகஹாதென்ன கனிஷ்ட வித்தியாலயத்துக்குள், பெற்றோர் சிலர் சகிதம் அத்துமீறி நுழைந்து, 10 மாணவர்களை பாடசாலையில் இணைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதியமைச்சர் பாலித தெவரபெரும மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட 13 பேரை,
10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணைகளில், மத்துகம நீதவான் நீதிமன்ற நீதவான் கடந்த வியாழக்கிழமையன்று விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
7 minute ago
14 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
1 hours ago
2 hours ago