2021 மார்ச் 04, வியாழக்கிழமை

'போர் போன்று சமாதானமும் சவாலானது'

Kogilavani   / 2016 மே 19 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்துன் ஏ.ஜயசேகர

26 ஆண்டுகாலமாக இடம்பெற்ற பிரிவினைவாதப் பயங்கரவாதத்துக்கெதிரான போரில் சந்தித்த சவாலைப் போன்றே, முரண்பாட்டுக்குப் பின்னரான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதும் சமூகங்களுக்கிடையிலான பேசப்படும் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, 7 ஆண்டுகள் நிறைவு நிகழ்வு, ஸ்ரீ ஜயவர்தன கோட்டேயிலுள்ள நாடாளுமன்ற மைதானத்திலுள்ள தேசிய வீரர்கள் நினைவுத் தூபியில்  நாட்டின் தேசிய வீரர்கள் தினம் இடம்பெற்ற போது, நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

பிராந்தியத்தின் நற்பெயர், தாய்நாட்டின் இறையாண்மை, சமாதானம் ஆகியவற்றைக் காப்பதற்கு, பெருமையுடனும் கவலையுடனும் உச்சபட்ட தியாகத்தை மேற்கொண்ட மற்றும் தங்கள் அங்கங்களை இழந்த போர் வீரர்களை, இலங்கையிலுள்ள இலங்கையர்கள் மாத்திரமன்றி, வெளிநாட்டிலுள்ளோரும் நினைவுகூர்வதாகத் தெரிவித்தார். போரின் போது முப்படையினரும் பொலிஸாரும் பொதுமக்களுமென, 100,000க்கும் மேற்பட்டோர் உயிர்த்தியாகங்களை மேற்கொண்டமை கவலையானது எனத் தெரிவித்த அவர், இலங்கை மண்ணிலிருந்து பிரிவினைவாதப் பயங்கரவாதத்தை அழித்தொழித்தமை, பெருமையும் மகிழ்ச்சியுமாகும் எனவும் தெரிவித்தார்.

'நீண்டகால சிவில் போரின் பின்னர், இதயங்களை வெல்வதும் சமய மற்றும் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதும் இலகுவான நடவடிக்கை ஒன்றல்ல. இன்னொரு போர் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கும் பயங்கரவாதத்திலிருந்து போர் வீரர்கள் மீட்டெடுத்த தாய்நாட்டைக் காப்பதற்கும், நிலைத்திருக்கக்கூடிய சமாதானக் கட்டியெழுப்புவதுடன் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். அதுவே, போர் வீரர்களை மதிப்பதற்கும் நினைவுகூர்வதற்குமான வழியாகும்' என்றார்.

இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவப் படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அமைச்சர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .