2021 மே 06, வியாழக்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சை வேண்டுமா, வேண்டாமா? என்று ஆராயவேண்டும்

Gavitha   / 2015 நவம்பர் 20 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

'ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், கிடைக்கவேண்டிய 15ஆயிரம் பேருக்கும் கிடைக்கும் அதில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை' என்று தெரிவித்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், 'புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்காலத்தில் நடத்துவதாக இல்லையா என்பது தொடர்பில் ஆராயவேண்டும்' என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்துபவர்களுக்கு புலமைப்பரிசில் மட்டுமே கிடைக்கிறது. அதற்காக அந்த மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை, இந்த பரீட்சையினால் மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுகின்றனர். மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுவிடுகின்றனர்.

ஆகையால், வெளிநாடுகளில் இருப்பதை போல ஒரேயொரு பரீட்சையை மட்டும் நடத்துவதற்கு கலந்தாலோசிக்கவேண்டியுள்ளது என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .