2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸாருக்கு இடமாற்றம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் உட்பட இரண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் நான்கு பிரதம இன்ஸ்பெக்டர்களும், சேவை நோக்கம் கருதி, பொலிஸ்மா அதிபர் என்.கே இலங்கக்கோனால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தகவல்களின்படி, விசேட பொலிஸ் பிரிவின் பணிப்பாளரான டி.சி.ஏ தனபால, தங்காலை பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள அதேவேளை, அரச புலனாய்வுச் சேவையின் எம்.எச் மார்சோ, விசேட பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கஹவத்தை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியான எல்.பி ராஜமந்திரி, வெலிபென்ன பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகவும் அந்நிலையத்தைச் சேர்ந்த ஏ.ஏ.கே.எஸ் அதிகாரி, புத்தளம் பொலிஸ் பிரிவுக்கும் வெலிகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஓ.வி.ஆர்.பி ஒலுகல, கஹவத்த பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த டபிள்யூ. ஏ. எச்.என் ஜயதிலக, வெலிகம பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .