2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

மீட்க முடியாத நிலையில் எம்.ஐ 17

Editorial   / 2017 மே 30 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அனர்த்தங்களினால் சிக்குண்டுள்ள மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரண உதவிகளுடன் சென்ற நிலையில், அவசரமாகத் தரையிறக்கப்பட்ட எம்.ஐ 17 ரக ஹெலிகொப்டரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இயந்திரக் கோளாறு காரணமாக, இந்த ஹெலி, காலி-பத்தேகம பகுதியில், திங்கட்கிழமை காலை 8:30 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமானப்படை அறிவித்தது.

இந்நிலையில்,  தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டரைச் சுற்றிவர வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மீட்க முடியாதுள்ளதாகவும் எனினும், வெள்ளம் வடிந்த பின்னரே அதனை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இலங்கை விமானப்படை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அதன் பின்னரே ஹெலிகொப்டருக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய முடியுமென,   இலங்கை விமானப்படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் கிஹான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான மேற்படி ஹெலிகொப்டர், தரையிறக்கப்பட்ட போது, அதில் விமானப்படை வீரர்கள் 11 பேர் இருந்தனர். எனினும், அவர்களில் ஒருவருக்கே சிறுகாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், அவசரமாக தரையிறக்கியமையால், வீடொன்றின் கூரையும் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .