2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் மீள்குடியேற்றப்படாத நிலையில் 93 குடும்பங்கள்

Super User   / 2010 ஜூன் 22 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இடம்பெயர்ந்தோர் முகாம்களும் மூடப்பட்டிருந்தபோதிலும், 93 குடும்பங்களைச் சேர்ந்த 433 பேர் தொடர்ந்தும் மீள்குடியேற்றப்படாத நிலையிலுள்ளனர். 

இம்மக்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தொடர்ந்தும் தங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகப் புள்ளிவிபர அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளது.

கிரான் பிரதேச செயலகப் பிரிவில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 212 பேரும், செங்கலடிப் பிரிவில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 221 பேரும் இவ்வாறு உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .