2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு - கொழும்பு புகையிரதசேவையின் குறைபாடுகளும் உடனடியாக தீர்க்கப்படும் - போக்குவரத்து அமைச்ச

Suganthini Ratnam   / 2010 ஜூலை 06 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகோவிற்கும் மட்டக்களப்பிற்கும் இடையில் அமைந்துள்ள புகையிரதவேகத் தடைகள் உடனடியாக குறைக்கப்படவுள்ளன.

அதன் பின்னர் கொழும்பிற்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான புகையிரதங்கள் குறித்த நேரத்திற்கு குறித்த இடத்தை வந்தடையுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல் மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்கும் இடையிலான புகையிரதசேவையிலுள்ள அனைத்துக் குறைபாடுகளும் உடனடியாக நிவர்த்தி செய்யப்படவுள்ளதென போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கலாநிதி லலிதஸ்ரீகுணரூபன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு நேற்று மாலை திடீர் விஜயம் மேற்கொண்ட செயலாளர், குறைபாடுகளைக் கேட்டறியும் உயர்மட்ட மாநாட்டில் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச்சபை புகையிரத திணைக்கள உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு தடையின்றி இலங்கை போக்குவரத்துச்சபை பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்துமாறும் பிரதேச அதிகாரிகளைப் லலிதஸ்ரீகுணரூபன் பணித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X