Editorial / 2017 ஜூன் 07 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் 60 சதவீதமான பங்கை, இந்தியாவுக்கு வழங்குவதற்கும், மிகுதி 40 சதவீதத்தை வைத்துக் கொள்ளவும், அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பிக்க, அரசாங்கம் திட்டமிடுகிறது என, ஒன்றிணைந்த எதிரணி, நேற்றுக் குற்றஞ்சாட்டியது.
ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவ்வணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடு, தொழிற்சங்கங்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
“பேரழிவுக்கு நடுவில், நாட்டின் வளங்களை விற்பனை செய்வது, தர்மமாக அமையாது” என்று, அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், நுவரெலியா, கண்டி, காலி ஆகிய தபால் நிலையக் கட்டடங்கள், ஹொட்டல் வேலைத்திட்டங்களுக்காக, இந்தியாவிடம் கையளிக்கப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
21 minute ago
47 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
47 minute ago
56 minute ago