2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

மூதூரில் 460 பேருக்கு டெங்கு

Editorial   / 2020 ஜனவரி 04 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்..எல்.நௌபர்)

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 460 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி தெரிவித்தார்.

மூதூரில் ஏற்பட்டுள்ள டெங்கு நோய் பற்றி ஆராயும் விசேட கூட்டமொன்று மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக் தலைமையில் மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(03) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஏற்பட்டுவரும் டெங்குநோயை கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது கருத்துத்தெரிவித்தபோது வைத்தியர் ஜெஸ்மி, மூதூர் - ஆனைச்சேனை கிராம சேவையாளர் பிரிவிலிலேயே இதுவரை கூடுதலாக 132 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தோப்பூரிலுள்ள இக்பால் நகர், அல்லை நகர் கிழக்கு அல்லை நகர் மேற்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவிவுகளிலும் அதிகமான  டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2019 ஒக்டோபர் 20 ஆந் திகதிக்குப் பிறகே மூதூரில் கூடிய டெங்கு நோய் தீவிரமாக அதிகரித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .