2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

’மதரஸாக்களையும் காதி நீதிமன்றங்களையும் இல்லா​தொழிப்பது எப்போது?’

Gavitha   / 2020 மார்ச் 12 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள மதரஸக்களையும் காதி நிதிமன்றங்களையும் இல்லாமல் ஒழிப்பதற்கு, தற்போதுள்ள இந்த அரசாங்கம், பொதுத் தேர்தலுக்கு முன்னர் பதிலளிக்கவேண்டும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வண.அத்துரலிய ரத்தண தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே, தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு, தேர்தல் காலத்தில் ஆதரவு வழங்கியதாகவும் நாட்டிலுள்ள மதரஸாக்களை இல்லாமல் செய்வதாகவும் காதி நீதிமன்றங்களை இல்லாம் செய்வதாகவும் அப்போது வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாத காலம் மு​டி​வடைந்தும், அதற்காக தற்போதுள்ள அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை கூறவேண்டும் என்று அவர் கோரினார்.

நாட்டில் 1,000க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் இயங்கிவருவதாகவும் இஸ்லாம் மதம் அல்லாதோரைக் கொலை செய்யவேண்டும் என்றே இந்த மதரஸாக்களில் வழங்கப்படுகின்ற புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதை பலமுறை தாங்கள் எடுத்துக் கூறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் வியாபாரங்களை மேற்கொள்வதற்காக, பல மில்லியன் ரூபாய் பணத்தை, சவுதி அரேபிய தனவந்தர்கள் அனுப்பி வருவதாகவும் அதற்கென, 1,200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளமை தங்களுக்குத் தெரியும் என்னும் 100க்கும் 90 சதவீதம் இலாபம் என்ற அடிப்படையிலேயே, தனவந்தர்களால் பணம் அனுப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹரான் போன்றோரை கைது செய்வது இலகுவாக இருந்தாலும் அவரைப் போன்ற ஒரு பயங்கரவாதி நாட்டில் இனிமேல் தோன்றாமல் இருப்பதற்காகவே, அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை விடுத்து வருவதாகவும் எனவே, தேர்தலுக்கு முன்னர், இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அரசாங்கம் தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் கோரினார்.

இதற்கு பதில் கூறினால் மாத்திரமே, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தாங்கள் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கமுடியும் என்னும் இல்லையேல், தானே பொதுத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் வரலாம் என்றும் கூறினார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக, கோட்டாப ராஜபக்‌ஷ​ பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்றும் தற்போது தலைவராக இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அந்தப் பொறுப்பிலிருந்து விலகி, தற்போதைய ஜனாதிபதிக்கு அந்தப் பதவியை வழங்கினாலே, நாட்டிலுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X