2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

மனகசப்பால் வெட்டினேன்: சந்தேகநபர் வாக்குமூலம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவருடைய தந்தைக்கும் எனக்கும் இருந்த நீண்டகால மனக்கசப்பை அடுத்தே, அவருடைய மகனை தான் வெட்டிக் கொலை செய்ததாக அத்துருகிரிய பனாகொட, கபுகொடவில் வைத்து 10 வயது மாணவனை படுகொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவருடைய அப்பாவை பழிவாங்குவதற்காகவே, அவருடைய மகனை வெட்டிக்கொலைச்செய்தேன் என்றும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கடுவெல, கொத்தலாவல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான சந்தேகநபர், கல்கூரியில் வேலைச்செய்த தொழிலாளர் என்றும் அவரை பியகமவில் வைத்து சனிக்கிழமை (26) கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்தேகநபருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுவனை வெட்டியதாக கூறப்படும் அரிவாளை மறைத்துவைத்திருக்கின்ற இடத்தை காண்பிப்பதற்கு கல்கூரிக்கு அழைத்துசென்றபோதே அவர், கற்பாறைகளுக்கு இடையில் சறுகி விழுந்துவிட்டதால், அவரது காலிலேயே காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலைக்கு சென்ற ஹோமாகம நீதவான் வை.ஆர்.பி நெலும்தெரிய அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பனாகொடை பராகிராம வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் பயின்றவர் 10 வயதான மாணவனே, கொலைசெய்யப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (25) சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X