2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மன்னார் ’சதொச’ வளாகத்திலிருந்து 136 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் 'சதொச' வளாகத்தில், மனித புதைகுழியிலிருந்து இதுவரையிலும் 136 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில், 14 எலும்புக் கூடுகள் சிறுவர்களுடையது எனக் கண்டறியப்பட்டுள்ளன.

எலும்புக்கூடுகளை அகழ்ந்தெடுக்கும் பணிகள், நேற்று (19) புதன்கிழமை 74ஆவது தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டன.

மன்னார் மாவட்ட நீதவான்   ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்‌ஷ மற்றும் களனி பல்கலைகழகப் பேராசிரியர் ராஜ் சோம தேவ ஆகியோரின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அகழ்வுப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், மேலதிகமாக  உத்தியோகஸ்தர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முற்பகல் 11 மணியளவில், ஊடகவியலாளர்களைச் சந்தித்த சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்‌ஷ,

“குறித்த வளாகத்திலிருந்து இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 136 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் மீட்கப்பட்ட 130 எலும்புக்கூடுகள், மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் நாட்களில்,  காலை 10.30 மணி தொடக்கம் 11.30 மணி வரைக்கும், மாலை 3.30 மணி தொடக்கம் 4.30 மணி வரைக்கும் இடையிலான காலப்பகுதியில்,  அகழ்வுப் பணி இடம்பெறும் வளாகத்துக்குள் சென்று, தமது கடமைகளை ஊடகவியலாளர்கள் மேற்கொள்ள முடியுமென சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்‌ஷ மேலும்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X