2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

முன்னாள் பிரதமரின் இறுதிக் கிரியைகள் இன்று

Editorial   / 2019 நவம்பர் 23 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலஞ்சென்ற, இலங்கையின் 14ஆவது பிரதமரும் மூத்த அரசியல்வாதியுமான டி.எம்.ஜயரட்னவின் இறுதிச் சடங்குகள், இன்று (23) நடைபெறவுள்ளது

கம்​பளையிலுள்ள ஹலியத்த மைதானத்திலேயே அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அவரது பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை நேற்றைய தினம் கம்பளை, தொலுவயிலிருந்து விமானம் ஊடாக கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட டி.எம்.ஜயரட்னவின் பூதவுடல், நேற்று பிற்பகல் 1 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இறுதி அஞ்சலிக்காக நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட்டதுடன், அங்கு சென்ற ஜனாதிபதி பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .