2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் 500பேர் இவ்வாரம் விடுதலை

Super User   / 2010 மே 10 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு தரப்பினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 500பேர் இவ்வாரம் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

சமூகத்தில் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளத் தகுதி பெற்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புலிகள் வெற்றிகொள்ளப்பட்டு ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கொண்டாடப்படவுள்ள படை வீரர் வாரத்தை முன்னிட்டே புனர்வாழ்வழிக்கப்பட்ட 500பேர் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--