2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

மீன்பிடித்தலில் தடையிருப்பதாக மீனவர்கள் கவலை

ரொமேஷ் மதுஷங்க   / 2017 மே 31 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக, வடமாகாணத்தின் மீன் விற்பனைக்கு அதிக கேள்வி நிலவுகின்ற போதிலும், வடக்குக் கடற்பரப்பின் மீன்பிடித்தலில் இடம்பெற்றுவரும் சிக்கல்நிலைகள் காரணமாக, கேள்விக்கேற்ற விநியோகத்தை மேற்கொள்ள முடியாதிருப்பதாக, வடமாகாண மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் இந்நாட்களில், வடக்கு கடற்பரப்பில் நிலவும் காற்றழுத்தம் காரணமாக, அன்றாடம் பிடிக்கப்படும் மீன்களின் அளவு குறைவடைந்துள்ளதால், மீனின் விலை அதிகரித்துள்ளதாக, வடமாகாண மீன்பிடிச் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தெற்கில் ஏற்பட்டுள்ள வௌ்ளம் காரணமாக, மீன் விற்பனை நிலையங்களும் அழிவடைந்துள்ளதால், மீன் விநியோகம் முற்றாகத் தடைப்பட்டுள்ளது. இதனால், வடக்கின் மீன்களுக்கு நிலவும் கேள்விக்கு ஏற்ப விநியோகத்தை மேற்கொள்ள முடியாதுள்ளதாக, மேற்படி சங்கங்கள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .