2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மூன்றாவது ஊழல் நிறைந்த நிறுவனமாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை

Super User   / 2010 மே 31 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மூன்றாவது ஊழல் நிறைந்த நிறுவனமாக இலங்கை  கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

கல்வித் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றிற்கு அடுத்த படியில் இலங்கை  கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் ஊழல் காணப்படுவதாகவும் சி.பி.ரத்நாயக்க குறிப்பிட்டார். 

இந்நிலையில், ஊழல் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சி.பி.ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்தார்.
  Comments - 0

  • koneswaransaro Wednesday, 02 June 2010 03:51 AM

    அறிவை வளர்ப்பவர்களும் ஒழுங்கைப் பேணுபவர்களும் முதலாம் இரண்டாம் ஊழல் பிள்ளைகளானால் விளையாட்டுப் பையன்கள் மூன்றாவதாக வருவதில் என்ன தப்பு?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--