2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மொரட்டுவை பிரதேச மக்களை அதிரவைத்த தவளை கூட்டம்

Super User   / 2010 மே 13 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவ பிரதேசத்தில் இன்று காலை கடும் காற்று வீசியிருந்த நிலையில், அங்கு தவளைக் கூட்டங்கள்  வீடுகளுக்குள் புகுந்திருந்ததுடன், வீதிகளிலும் அலைந்து திரிந்ததாக அந்தப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுற்றாடல் அதிகாரி, இது  காலநிலை மாற்றத்திற்கான அறிகுறி எனவும் குறிப்பிட்டார்.  Comments - 0

 • xlntgson Thursday, 13 May 2010 10:18 PM

  இயற்கைஅழிவுகள் பெண்கள் ஒழுக்ககேடாக நடப்பதனால் ஏற்படுவதாக ஈரான் ஆயத்துல்லா கூறியிருந்தார். மக்களுடைய வயிற்றெரிச்சலிலும் சாபத்திலும் ஆட்சியாளர்கள் செங்கோலை புறக்கணித்து கொடுங்கோலை எடுத்தாலும் நடக்கும் என புராதன நூல்களிலும் ஜோதிட சாஸ்திரத்திலும் இருக்கிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை அழித்து வீடுகளில் இருந்து விருப்பம் இல்லாமல் பலாத்காரமாக இழுத்து போடுவதும் செங்கோல் ஆட்சி அல்ல. இடி விழும் என்று கூறும் மக்களின் கூற்றை இயற்கை பார்க்காமலும் கேட்காமலும் இராது. அழகை விட மனிதாபினம் முக்கியமில்லையா?

  Reply : 0       0

  sisra Thursday, 13 May 2010 10:22 PM

  இந்த தவளைகள் கடலில் இருந்து வந்தவையா ஆற்றில் இருந்து வந்தவையா? அறிகுறி சரி இல்லை, சுனாமி அல்லது சூறாவளி ஆக இருக்கலாம். பூமிக்கு அடியில் வாழும் தேரைகள் ஆக இருந்தால் பூமி அதிர்ச்சிக்கு அறிகுறியாகவும் இருக்கலாம்.

  Reply : 0       0

  nuah Thursday, 13 May 2010 10:31 PM

  மக்களின் சாபம் நல்ல குடிநீரின்றி தவிக்கும் தவளைகளின் சாபம் எல்லாம் சேர்ந்து உலக அழிவுக்கு ஆரம்பம். 2012இல் உலகம் அழிந்து விடும். சிரித்து மழுப்ப வேண்டாம் செல்வத்தை நிறைய சேர்ப்பதை விட்டு விடுங்கள். பணம் இருந்தால் செலவழித்து விடுங்கள்! கஞ்சத்தனம் செய்யாதீர்கள். பொய் புரட்டு, ஏமாற்று, வஞ்சகம் எல்லாவற்றையும் கை விடுங்கள். முக்கியமாக இலஞ்சம் வாங்கி இரகசிய வங்கிகளில் வைக்கிறவர்களுக்கு திடீர் மரணம் வரும். புது புது நோய்களினால் என்று கரையோரம் ஒதுங்கும் நீர்வாழ் உயிரினங்கள் சுவிஷேசம் கூறுகின்றன. எச்சரிக்கை! ஓம்

  Reply : 0       0

  srikant Thursday, 13 May 2010 10:39 PM

  இதெல்லாம் சுத்த பைத்தியகாரத்தனம்! பாம்புகளை சீனர்கள் உணவாக்கி கொண்டனர். தவளைகள் அதிகரித்து விட்டன! அவை வாழும் நீர்நிலைகளை டெங்கு பயத்தில் மண் போட்டு மூடிவிட்டனர். மேடாக்கி வீடுகள் கட்டிக்கொள்வதற்கு ஒப்பு எழுதிக்கொடுத்து விட்டனர். குப்பை கொட்ட கூட இடம் இல்லாமல் அடைத்துக்கொண்டு பெரிய மாளிகைகள், முதியவர் வாழ்கின்றனர் பிள்ளைகள் வெளிநாட்டில்! ஏழைகள் கூலி கொடுக்க கூட வழிஇல்லாமல் கூடாரங்களில் வாழ்ந்தனர், அங்கிருந்தும் விரட்டப்பட்டு கடலில் பாய தவளைகள் இடம் கொடுக்கின்றன. ஒரு வேளை திமிங்கிலங்களும் வரலாம்.

  Reply : 0       0

  KONESWARANSARO Friday, 14 May 2010 12:18 AM

  கவனம்.... தவளைகளும் நாடாளுமன்றம் சென்றுவிடக் கூடும்.

  Reply : 0       0

  Lankan Friday, 14 May 2010 02:43 AM

  இது சீனாவில் நடந்திருந்தால் மக்கள் குதூகலம் அடைந்திருப்பார்கள். நாங்களோ கவலைபடுகிறோம். நல்ல சூப் வியாபாரம் பண்ணியிருக்கலாம்.

  Reply : 0       0

  sheen Friday, 14 May 2010 09:45 PM

  அவற்றையும் சீன உணவுச்சாலைகளுக்கு அனுப்பிவைத்தால் நல்லது. கால்களை அமெரிக்கர்கள் விருப்பமாக சாப்பிடுவார்களாம். கால்களையும் சேகரித்து அனுப்பினால் நல்ல ஏற்றுமதி வர்த்தகம்! திடீர் மழையும் திடீர் வெய்யிலும் மாறி மாறி அடித்ததில் மூளை குழம்பிப்போனவையோ, தெரியாது! கால நிலை விபரியாசம்/ விபரீதம் மனிதர்களை விட முதுகெலும்பில்லா பிராணிகளுக்கும் தபக்கை மாதிரி நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணிகளிலும் பெரும் மாற்றத்தை தோற்றுவிக்கும். ஜப்பானில் பூகம்பம் ஏற்படும் முன்னும் எரிமலைகள் வெடிக்கும் முன்னும் இடம்பெயரும்!

  Reply : 0       0

  wasana Saturday, 15 May 2010 03:31 AM

  கொம்பனித்தெருவில் மக்களின் வீடுகளை உடைத்தவர்கள் இந்த தவளைகளின் இருப்பிடங்களையும் உடைத்து விட்டார்களோ. மனிதர்களை விரட்டினார்கள் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது தவளைகளை விரட்டியுள்ளார்கள். இனி என்ன நடக்கப் போகுதோ?

  Reply : 0       0

  wasana Saturday, 15 May 2010 03:32 AM

  கொம்பனித்தெருவில் மக்களின் வீடுகளை உடைத்தவர்கள் இந்த தவளைகளின் இருப்பிடங்களையும் உடைத்து விட்டார்களோ. மனிதர்களை விரட்டினார்கள் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது தவளைகளை விரட்டியுள்ளார்கள். இனி என்ன நடக்கப் போகுதோ?

  Reply : 0       0

  wasana Saturday, 15 May 2010 03:35 AM

  கொம்பனித்தெருவில் மக்களின் வீடுகளை உடைத்தவர்கள் இந்த தவளைகளின் இருப்பிடங்களையும் உடைத்து விட்டார்களோ. மனிதர்களை விரட்டினார்கள் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது தவளைகளை விரட்டியுள்ளார்கள். இனி என்ன நடக்கப் போகுதோ?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--