2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கல்லால் தாக்கி பிச்சைக்காரர் படுகொலை; கல்கிஸை பகுதியிலிருந்து சடலம் மீட்பு

Super User   / 2010 ஜூன் 29 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட ஊனமுற்ற பிச்சைக்காரர் ஒருவரின் சடலமொன்று பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி பிச்சைக்காரர் மீது இனந்தெரியாதோர் சிலர் கற்களினால் தாக்கியே படுகொலை செய்துள்ளனர். இதற்கான காயங்கள் அவரது உடலில் காணப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சக்கர நாற்கலியினைப் பயன்படுத்தியுள்ள மேற்படி பிச்சைக்காரர், குறித்த பிரதேசத்தில் அதிர்ஷ்டச் சீட்டு விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

அதிர்ஷ்டச் சீட்டு விற்பனையில் கிடைக்கப்பெற்ற பணத்தினைக் கொள்ளையிட்டவர்களே அவரைக் கற்களால் தாக்கி படுகொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், சடலம் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து ஒருதொகை அதிர்ஷ்டச் சீட்டுக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலிருந்து இந்த ஒரு மாத காலத்துக்குள் மாத்திரம் ஐந்து பிச்சைக்காரர்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்திலும் பலத்த காயங்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .