2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவில் தொல்பொருள் புலிகளின் பதுங்குழிகள்-ஜாதிக ஹெல உருமய

Super User   / 2010 ஜூன் 23 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 50  மேற்பட்ட தொல்பொருள் இடங்களை விடுதலை புலிகள் பதுங்குழிகளாக பயன்படுத்தியுள்ளதாக ஜாதிக ஹெல உருமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் வணக்.எல்லாவல மேதானந்த தேரர் டெய்லிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

மேலும், வவுனியா, அநுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 1633 தொல்பொருள் இடங்களை விடுதலை புலிகள் சேதப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த இடங்களை கண்கானிப்பதற்காக வேண்டி தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்திடம் கையளிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி எடுக்க வேண்டும் என வணக்.எல்லாவல மேதானந்த தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--