2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

முல்லைத்தீவில் 31 கிராமசேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றம்

Super User   / 2010 மே 07 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட 31 கிராம சேவகர் பிரிவுகளில் எதிர்வரும் 10ஆம் 12ஆம் திகதிகளில் மீள்குடியேற்றம் இடம்பெறும் என அந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

அந்த வகையில், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 18 கிராம சேவகர் பிரிவுகளிலும் இந்த மீள்குடியேற்றம் இடம்பெறவிருக்கிறது.

இந்நிலையில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்து மீள்குடியேற்றத்திற்கு பதிவு செய்து அனுமதி பெற்றவர்கள் எதிர்வரும் 10ஆம் 12ஆம் திகதிகளில் காலை 7 மணிக்கு வவுனியா நகரசபை மைதானத்திற்கு வருமாறும் இமெல்டா சுகுமார் கேட்டுக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--