2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மீள்குடியேற்ற அமைச்சு அதிகாரி பதவிநீக்கம்

Super User   / 2010 ஜூலை 07 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருமண வைபவமொன்றில்  மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவும் மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் நடனமாடிய காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சம்பவம் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சு அதிகாரியொருவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அமைச்சின் ஊடக இணைப்பு அதிகாரியான ஸ்டான்லி பதிராஜ, அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவினால் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரினதும் பிரதியமைச்சரினதும் நடனம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதன்பின் அது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

  Comments - 0

  • Waakir Hussain,, Saudi Arabia Wednesday, 07 July 2010 11:24 PM

    டான்ஸ் பண்ணுவதும் ஒரு குற்றமா? மினிஸ்டர் என்றாலும் அவரும் ஒரு சாதாரண மனிதனே. இலங்கையில் என்னதான் நடகிறது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .