2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

‘முழுமையான விவரங்கள் நாளை வெளியாகும்’

George   / 2017 ஜூன் 01 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“நாட்டில் கடந்த வாரம் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட சேதவிவரங்கள் தொடர்பான முழுமையான அறிக்கை வௌ்ளிக்கிழமை வெளியிடப்படும்” என, அமைச்சரவை ​இணைப்பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, நாட்டின் தற்போதைய அனர்த்த நிலை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது, அவர் இதனைக் கூறினார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், “ அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு தேவையான உதவிளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள, மீட்பு பணிகளில் பயிற்றப்பட்ட இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .