2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

மழைக்கு மத்தியிலும் வௌ்ளவத்தையில் மீட்புப் பணிகள்

Princiya Dixci   / 2017 மே 18 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-06, வௌ்ளவத்தை சவோய் திரையரங்கத்துக்கு அருகிலுள்ள கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற கட்டிடமொன்று, இன்று (18) முற்பகல் 11 மணியளவில் சரிந்து விழுந்ததில், 27 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்குண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தேடுதல் பணிகளை  முப்படையினரும், பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் கடும் மழைக்கு மத்தியிலும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

இராணுவ அதிகாரிகள் 10 பேர், இராணுவ சிப்பாய்கள் 100 பேர், விமானப்படை அதிகாரிகள் மூவர் உள்ளிட்ட விமானப்படையினர் 30 பேர் குறித்த மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X